Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தார்ப்பாலின், நிழல்வலை திருச்சியில் 20 சதவீதம் வரை விலை உயர்வு

தார்ப்பாலின், நிழல்வலை  திருச்சியில் 20 சதவீதம் வரை விலை உயர்வு

குறிப்பாக கீரைகள், மரக்கன்றுகள், பழ கன்றுகள் உற்பத்திசெய்ய அதிகமாக நிழல்வலைகள் பயன்படுத்துகின்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, கெமிக்கல்ஸ் உயர்வு காரணங்களால் நிழல்வலை, தார்ப்பாலின் விலை 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு சீரான ஈரப்பதத்தை பராமரிக்க நிழல்வலை அமைத்து சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. குறிப்பாக கீரைகள், மரக்கன்றுகள், பழ கன்றுகள் உற்பத்திசெய்ய அதிகமாக நிழல்வலைகள் பயன்படுத்துகின்றனர். விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தில் அரசு நிழல்வலைகள் கொடுக்கிறது. மானியத்தில் கிடைக்கப்பெறாதவர்கள் தனியாரிடம் வாங்குகின்றனர்.

இந்த நிழல்வலைகள் திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படுகின்றன. கடந்த 2 மாதத்திற்கு முன் 5 அடி உயரம் 50 மீட்டர் நீளம் நிழல்வலை ரூ.850க்கும், 10 அடி உயரம் 50 மீட்டர் நீளத்தில் 1,500க்கு விற்றது. தற்போது, 5 அடிஉயர வலை 950க்கும், 10 அடி நீளம் ரூ.1,700க்கும் உயர்ந்துள்ளது. அதேபோல் பாலிதீனில் தயாரிக்கப்படும் தார்பாலின் 9 அடி -6 அடி ரூ.100லிருந்து 150ஆகவும், 30க்கு 30 அளவு தார்பாலின் ரூ.1750லிருந்து 1,900 ஆக உயர்ந்துள்ளது. கடும் வெப்பம், தேவை அதிகரிப்பு, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, கெமிக்கல் விலை உயர்வு போன்றவற்றால் நிழல்வலை, தார்ப்பாலின் விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, கடை உரிமையாளர் என்.ஷேக் இப்ராஹிம் கூறுகையில், நிழல்வலை விவசாயத்திற்கும், கட்டுமானத்திற்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. பெட்ரோலிய பொருட்கள் மற்றும் கெமிக்கல்ஸ் விலை உயர்வு போன்றவற்றால் பெட்ரோலிய மூலப்பொருளால் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன என்றார்.

முந்தைய செய்தி
அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் - ரூ.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு
அடுத்த செய்தி
ரூ.4,000 கோடிக்கும் அதிகமான புதிய ஆர்டர்கள் - பிரீமியர் எனர்ஜீஸ் நிறுவனம் தகவல்

தொடர்புடைய செய்திகள்